ரஷ்ய மொழியில் கைதி….. Trailer வெளியாகி பெரும் வரவேற்பு!!
நடிகர் கார்த்தி, நரேன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ளது.
2019-ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘கைதி’.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
ஆக்ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவானது.
இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கைதி இரண்டாம் பாகம் கட்டாயம் வரும் என படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருந்தார்.
இந்நிலையில்,
‘கைதி’ திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கைதி படத்தின் ரஷ்ய மொழி டிரைலர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குமுன் கைதி திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ‘கைதி டில்லி’ என்ற பெயரில் வெளியானது குறிப்பிடத்தக்கது.