FEATUREDLatestNewsTOP STORIES

திடீர் சுகவீனதிதால் மரணமடைந்த யாழ் பல்கலை மாணவி….. கண்ணீர் மல்க இறுதி யாத்திரைக்கு அனுப்பிவைத்த உறவுகள்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பளை, சாயுடை  பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம்(25/12/2023) அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன.

அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர், நண்பிகள் , ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர்.

குறித்த மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சலும் வாந்தியும் இருந்ததன் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில்,

கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில்,

அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்(23/12/2023)காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

குறித்த யுவதி டெங்கு தொற்றினால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும்,

உடற்கூற்று பரிசோதனைகளின்படி அவரது மரணத்திற்கான காரணம் என்ன என தெரியவில்லை.

இந்நிலையில்,

அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவ‌ல்துறை‌யின‌ர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *