ஹெரோயின் உள்ளெடுத்த பூசகர் மரணம்….. நல்லூர் பகுதியில் சம்பவம்!!

ஹெரோயின்(Heroin) போதைப்பொருளை ஊசிமூலம் எடுத்துக்கொண்ட இளம் கோவில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ் நல்லூர் நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கோவில் பூசகரே நேற்று(08/06/2023) உயிரிழந்துள்ளார்.

நேற்று(08/06/2023) மாலை ஆலய பூஜை முடித்துவிட்டு வீட்டுக்கு அருகாமையில் உள்ள இடத்தில் ஊசிமூலம் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *