இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டி அறிமுகம்!!
டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி வெளியீட்டு விழா நிகழ்வு இன்று(17/08/2022) இடம்பெற்றது.
இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் ‘கஞ்சன விஜயசேகர’ அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிசக்தி துறையில் மிகவும் தேவையான மாற்றங்கள் இடம்பெறுவதையும் எதிர்காலத்திற்கான திட்டங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெளியீட்டு விழா நிகழ்வு அமெரிக்கத் தூதுவர் ‘ஜூலி சாங்'(US Ambassador Julie Chang)முன்னிலையில் நடைபெற்றது.
இது குறித்து அமெரிக்க தூதுவர் குறிப்பிடுகையில்,
இலங்கை இது போன்ற முச்சக்கர வண்டிகளுக்கான மின்சார மயமாக்கல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.
அமெரிக்கத் தூதுவரான “ஜூலி சங்” அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக.
அத்துடன்,
இலங்கையின் எரிபொருள் சவால்களை எதிர்கொள்ள தனியார் மற்றும் அரசாங்க கூட்டிணைவு மூலம் இது போன்ற புதுப்பிக்கத்தக்க தீர்வுகள் உருவாக்குகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.