போராட்டத்தில் கிடைத்த வெற்றியை கொண்டாட முற்படடவார்…… பரிதாபமாக மரணம்!!
நேற்று முன்தினம்(10/07/2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வெற்றி கிட்டியதை அடுத்து தேசியக் கொடியுடன் மின்கம்பத்தில் ஏறியவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
அவரது சடலம்
அலவ்வ கபுவரல புகையிரதப் பாதையில் நேற்று (10/07/2022) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அலவ்வ குடுமுல்ல பகுதியைச் சேர்ந்த சமிந்த லால் குமார் (39 வயது) என்பவரே சடலமாக மீடகப்பட்டவராவார்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.