கோட்டாபய மகிந்த உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பசிலின் இரகசிய அமெரிக்கா பயணம்!!

இலங்கை அரசியலில் மிக முக்கிய பேசுபொருளாகவும் கொரோனா ஒழிப்பில் அரசாங்க தரப்பில் முக்கிய பணியாற்றி வருபவரும் நாட்டின் பொருளாதார புத்தெழுச்சித் திட்டங்களுக்கு தலைவராக இருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ திடீரென அமெரிக்காவிற்குச் சென்றுள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பசில், அமெரிக்கா செல்லவுள்ள விடயம் கடைசி தருணம் வரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கூட தெரியாது என்று தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ச தனது பயணத்தை இரகசியமாக ஏற்பாடு செய்துள்ளார்.புலனாய்வு பிரிவினர் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே ஜனாதிபதிபதியும் பிரதமரும் பசில் ராஜபக்ஷவின் வௌிநாட்டு பயணம் குறித்து தெரிந்து கொண்டுள்ளனர். இருவருமே தகவல்களால் அதிர்ச்சியடைந்தனர்.

முன்னதாக புதிதாக நிறுவப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான நிலையான தீர்வுகளுடன் பசுமை இலங்கையை உருவாக்குவது தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். அவர் அதன் தலைவராக உள்ளார். கூட்டம் முடிந்த உடனேயே ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அலரி மாளிகையில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் அவர்கள் மூவரையும் தவிர வேறு யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராஜபக்ஷ தான் வைத்திய பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளதென இதற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பல சந்தர்ப்பங்களில், அவர் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாராகி வந்தார், ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அதைத் தவிர்த்துவந்தார். பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக வெளிநாடு செல்ல பசில் ராஜபக்ஷ தயாராக இருந்தபோதிலும், அது கடந்த  ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஜனவரி மாதத்திலும் அவர் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை,

அதன் பின்னர் கொவிட் தொற்றுநோய் காரணமாக அவரது பயணம் ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. மருத்துவ பரிசோதனைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவது ஆபத்தானது என்றும், இதன் விளைவாக அவர் எவருக்கும் தகவல் தெரிவிக்காமல் இந்த முறை அமெரிக்கா செல்வதற்கான பயணத்திற்கு இரகசியமாக தயாராகி வந்ததாக அவரது உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தநிலையிலேயே நேற்று அதிகாலை பசில் அவரது மனைவி புஸ்பா ராஜபக்சவுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வற்புறுத்தலின் பேரில், அவரது மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன் அவர் இலங்கைக்கு திரும்புவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *