ஊர்காவற்துறையிலுள்ள வீடொன்றிலிருந்து….. தீயில் கருகிய இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா ஆகிய வயது முதிர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் மறைந்த ஊடகவியலாளரும் கருத்தோவியருமான பயஸின் தாய் மற்றும் சிறிய தாயாரென தெரியவருகிறது.
உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடாத்தும் காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? தீ விபத்து ஏதும் ஏற்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.