பல மாத போராடடத்தில் ட்விட்டரை கைப்பற்றிய “எலான் மஸ்க்”….. பல மறுசீரமைப்புகளுடன் புதிய கட்டணங்கள்!!

ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில்,

அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்‘ (Blue tick) வசதிக்கு மாதந்தோறும் 8 டொலர்களை வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பல மாத போராட்டத்திற்கு பிறகு ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்,

அதிரடியாக சில மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில்,

ட்விட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது,

பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஆலோச்சிக்குமாறு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும்,

அந்த வகையில்,

அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்'(BlutTick)வசதிக்கு மாதந்தோறும் 8 டொலர்களை வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில்,

அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்'(BlueTick) வசதிக்கு மாதந்தோறும் 8 டொலர்கள் வசூலிக்கப்படும், நீல நிற டிக்கிற்கு கட்டணம் இல்லை என அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார் எலான் மஸ்க்.

கட்டணம் செலுத்தி ப்ளூ டிக்(BlueTIck) பெறும் பயனர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதிக நேரங்கள் கொண்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவிடும் வசதியும், பாதி விளம்பரங்கள் மட்டும் இருக்கும் வசதியும் வழங்கப்படும் எனவும் இந்த கட்டணம் ப்ளூ டிக்(BlueTick) வாங்கும் நாடுகளை பொறுத்து,

ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்றவாறு கட்டணம் மாறுபடும் எனவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இந்த கட்டணம் மூலம் பெறப்படும் வருமானத்தில் இருந்து சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு வெகுமதி பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது,

​​நீல நிற டிக்கிற்கு கட்டணம் இல்லை.

கூடுதல் ஆவணங்களுடன் அனைத்து பயனர்களுக்கும் ட்விட்டர் வழங்கும் சரிபார்ப்பு படிவத்தை பயனர்கள் நிரப்ப வேண்டும்.

இதைத் தொடர்ந்து,

ட்விட்டரில் உள்ள பிரத்தியேக சரிபார்ப்புக் குழு பயனர் சமர்ப்பித்த அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, சரிபார்ப்பு அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.

ப்ளூ டிக்(BlueTick) சரிபார்ப்புக்கான புதிய விலை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை மஸ்க் இன்னும் அறிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *