குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள்….. CERT-IN நிறுவனம் பகிரங்க குற்றச்சாட்டு!!
சைபர் துறை நிறுவனமான CERT-IN டெஸ்க்டாப்களுக்கான கூகுள் குரோம் பிரவுசரில் மிக முக்கிய பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக எச்சரிக்கை தகவலை வெளியிட்டு உள்ளது.
இந்த குறைபாடு அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
CERT-IN வெளியிட்டுள்ள தகவல்களில் அதிக பிழைகள் நிறைந்த கூகுள் குரோம் வெர்ஷன்கள் பற்றி தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மென்பொருளில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41 மற்றும் அதற்கு முன் வெளியாகி இருந்த அப்டேட்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாக CERT-IN தெரிவித்து உள்ளது.
இந்த பிழை காரணமாக ஹேக்கர்கள் ஆர்பிடரி குறியீடுகளை பயன்படுத்தி பயனரின் மிக முக்கிய தகவல்களை அபகரிக்க முடியும்.
ஹேக்கர் பாதுகாப்பு தடைகளை எதிர்கொண்டு, பஃபர் ஓவர்ஃபுளோ செய்ய முடியும்.
இந்த குறைபாட்டில் இருந்து பாதுகாப்பாக இருக்க பயனர்கள் கூகுள் குரோம் வெர்ஷன் 101.0.4951.41-க்கு அப்டேட் செய்வது அவசியம் ஆகும்.
இதற்கு முன் வெளியான வெர்ஷன்களை ஹேக்கர்கள் எளிதில் குறிவைத்து மிக முக்கிய தகவல்களை அபகரித்து விட முடியும்.
இந்த குறைபாடுகள் இருப்பது பற்றி கூகுள் நிறுவமும் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அவற்றை பட்டியலிட்டுள்ளது.