கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் 3 ஆம் உலகப்போர் வந்துவிடும்! எச்சரிக்கும் டிரம்ப்

அமெரிக்காவின் (USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனாதிபதியானால் 3 ஆம் உலகப்போர் வந்துவிடும் என டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சீன ஜனாதிபதி  ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புதின் போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவுக்கு திறமை கிடையாது.

அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் நிச்சயம் 3-ம் உலகப்போர் வந்துவிடும். பல லட்சம் பேரின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகிவிடும். அமெரிக்காவின் மகன்களும், மகள்களும் ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் போரில் சண்டையிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நான் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 3-ம் உலகப்போர் நிகழாமல் நிச்சயம் தடுப்பேன்.” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸீம் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இருவரும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தற்போதைய அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (Donald Trump) முன்னிலை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சிஎன்பிசி அமெரிக்க பொருளாதார நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் 48 சதவீத வாக்குகளும், கமலா ஹாரிஸ் 46 சதவீத வாக்குகளும் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *