கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் நாளை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாக உள்ளது.
குறித்த பரீட்சைக்கு தோற்றும் இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருந்துகொண்டே இவர்கள் பரீட்சை எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் சாந்தி செனவிரத்ன தெரிவித்தார்.
அந்த வகையில் கரந்தெனிய மற்றும் ஹிக்கடுவ மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு மாணவர்களும் ஒரே மருத்துவமனையில் க.பொ.த சாதாரண தர பரீட்சையை எழுத தென்மாகாண கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மருத்துவமனையில் இரண்டு கண்காணிப்பு அதிகாரிகள் மாகாண கல்வித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காலியில் உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலை மற்றும் அஹங்கமவில் உள்ள ஒரு பாடசாலை மாணவர் என இருவரே இவ்வாறு பரீட்சை எழுத்த உள்ளனர்.