கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்! இரு தினங்களுக்கு வர்த்தக நிலையங்கள் மூடப்படுகின்றது
நாவலப்பிட்டி நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை மற்றும் நாளை மறுநாள் தற்காலிகமாக மூடுவதற்கு தொழிற்ச்சங்கம் தீர்மானித்துள்ளது.
நாவலப்பிட்டி சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்தின் அதிகார பிரதேசத்தில் 16 கொரோனா தோற்றாளர்களை இனங்காணப்பட்ட பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்ததாக தொழிற்ச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியவில் கொரோனா தொற்றுதியான சிலர், நாவலப்பிட்டி நகரில் சில வர்த்தக நிலையங்களுக்கு சென்றுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நாவலப்பிட்டி நகர் மற்றும் வர்த்தக நிலையங்களில் தொற்று நீக்குவதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் நகரிற்கு வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.