TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIESWorld

கரையோரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் King Air விமானம் ஒன்று இலங்கைக்கு!!

இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜதந்திரியான Doland Lu குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு ‘கிங் ஏர்‘ (King air) விமானமொன்று வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். King air விமானமானது, இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா ஏற்கனவே படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இரு நாட்களின் முன் காணாமல் போன….. 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை!!

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16/02/2024) சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம்(17/02/2024) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிறுமி நேற்று முன்தினம்(15/02/2024) மாலை காணாமற்போயுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்று(16/02/2024) காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் தாயும் தந்தையும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் நகரில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் தோன்றிய பெட்டியால் – வெடிகுண்டு அச்சமடைந்த மக்கள் பரபரப்பு!!

யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17/02/2024) காலை இரும்பு பெட்டியொன்று அனாதரவாக காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது. வைத்தியசாலை வீதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர். இதன்போது, குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது. இதனையடுத்து, காவல்துறையினர் குறித்த பெட்டியை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

35 நாடுகள் கலந்துகொள்ளும் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய விவசாய மாநாடு நாளை இலங்கையில்!!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடானது நாளை (18/02/2024) ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதிவரையான 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ரணில் அரசில் மனித உரிமைகள், சமூக நீதி பின்னோக்கிய தரத்தில் இலங்கை…. மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை!!

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாக பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகி வரு வகிறது. சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வேறுபாடுகளை Read More

Read More
FEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

34000km உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோள் இன்று மாலை புறப்பட தயார்!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ‘இன்சாட்-3 டிஎஸ்‘(INSAT-3DS) எனும் செயற்கைக் கோளை இன்று(17/02/2024) விண்ணில் ஏவவுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக இந்த செயற்கைக் கோள் ஏவப்படவுள்ளது. இன்சாட்-3டிஎஸ்(INSAT-3DS) செயற்கைக்கோள் 2275 கிலோ எடையுடன் 25 விதமான ஆய்வுக் கருவிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை துல்லியமாகக் கண்காணித்து வானிலை தகவல்களை நிகழ் நேரத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பொது இராஜதந்திர துணைச் செயலாளர்!!

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு அவர் விஜயம் செய்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது. நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது. இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

விசேட வேலை விசா வழங்கவுள்ள பிரான்ஸ் அரசு!!

பிரான்சிற்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 26 தொடங்கி ஓகஸ்ட் மாதம் 11வரை நடைபெறவுள்ள அதேநேரம் பாராலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 தொடங்கி செப்டம்பர்  8 வரையும் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் சுமார் 15 ஆயிரம் தடகள வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரும் 206 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஒரு வருடத்தில் மட்டும் இலங்கையில் 50000 விவாகரத்துகள்!!

இலங்கையில் திருமண முறிவுகள் அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேல் மாகாண நீதிமன்றத்தினால் தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக விசேட நிகழ்ச்சி ஒன்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார். இதன்போது, கருத்து தெரிவித்த அவர், டிசம்பர் 2022 நிலவரப்படி கிட்டத்தட்ட 50000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்த காலப்பகுதியில் 37514 வழக்குகள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகளுக்கான பராமரிப்பு தொடர்பானது. “இலங்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

39 மனைவிகள் 94 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 181 பேருடன்….. ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழும் உலகின் மிகப்பெரிய குடும்பம்!!

39 மனைவிகள் 94 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் என 181 பேருடன் உலகின் மிகப்பெரிய குடும்பமொன்று இந்தியாவில் வாழ்ந்து வருவதான ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் இந்த பெரிய குடும்பம் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறது. இம்மாநிலத்தின் பக்தாவாங் கிராமத்தைச் சேர்ந்த ஜியோனா சனா தனது 17வது வயதில் முதல் திருமணம் செய்துள்ளார். அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 10 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அந்த வகையில், அவருக்கு மொத்தம் 39 மனைவிகளும் Read More

Read More