TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

17 வயதான சிறுமி மாயம்….. உதவி கூறும் உறவுகள்!!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் 17 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர். தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த சமயம் சென்ற குறித்த சிறுமியே காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியிலேயே சிறுமி காணாமல் போயுள்ளார். காணாமல்போன சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் (0773715446 –0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பின் பிரபல பொது வைத்தியசாலையில் – மாற்றி செலுத்தப்பட்ட மருந்தால் பறிபோனது என் 21 வயது மகளின் உயிர்….. தாயார் குற்றச்சாட்டு!!

பேராதனை பொது வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட மருந்து மூலம் தனது மகள் உயிரிழந்து விட்டதாக தாய் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். 21 வயதான சாமோதி சந்தீபனி அஜீரணக் கோளாறு காரணமாக அண்மையில் கொட்டாலிகொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், அங்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் போது மகளின் நிலை மோசமடைந்து உடல் நீல நிறமாக மாறியதாக சாமோதியின் தாய் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார் என பிரபல தென்னிலங்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையின் நெடுநாள் படகை தீக்கிரையாக்கிய வெளிநாட்டுப் படகு….. மோசமான நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர்!!

காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டுப் படகு ஒன்றும் “சசிந்த புதா” என்ற நெடுநாள் படகும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்துக் குறித்து மேலும் தெரிய வருகையில், நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து கடற்றொழிலாளர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளது. இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முல்லைத்தீவு – பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்….. நால்வர் கைது!!

முல்லைத்தீவு – மல்லாவி, பாலிநகர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த (10/07/2023)அன்று பாலிநகரில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!! – Pasanga FM இதனை தொடர்ந்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வீதியை விட்டு விபத்து….. மாணவர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியில்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே வீதியை விட்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராஜஸ்தான் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நடிகர் விஜய் மகனுக்கு ஜோடியாக உள்ள நடிகை தேவயானியின் மகள்….. ஆர்வத்தில் சினிமா உலகம்!!

நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் இன் மகள் சினிமாவில் களமிறங்கவுள்ளார். 90 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை 2001 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இயக்குநர் ராஜகுமாரன் – நடிகை தேவயானியின் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவிற்கு ஹீரோயின் ஆக என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதுவும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

முச்சக்கர வண்டிகளில் கட்டணம் செலுத்தி அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதி!!

முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலங்காரங்களை நிறுவுதல் 30 வகைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலதிக தகவல்களை இணையத்தளத்திலோ அல்லது முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டுக் கிளையிலோ 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

மெக்சிகோவில் மனைவியை கொலை செய்து….. மூளையை உணவுடன் சேர்த்து சாப்பிட்ட கொடூரம்!!

வட அமெரிக்கா நாட்டில் மெக்சிகோ நகரில் மனைவியை கொலை செய்து அவரது மூளையை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில் மெக்சிகோ நகரில் வசித்து வருபவர் அவ்வாரோ(வயது 32). இவர் மூடப்பழக்கங்கள், மூட நம்பிக்கையை கொண்டவர். இவரது மனைவி மரியா மான்செராட்டை கொலை செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பொலிசார் சோதனையில் பிளாஸ்டிக் பையில் மனித உடம்பில் உள்ள சில துண்டுகள் இருப்பதை அறிந்த அவர்கள் குறித்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இன்று காலை பரீட்சார்த்தமாக பயணித்தது யாழ்தேவி….. வார இறுதியிலிருந்து சேவையில்!!

யாழ்தேவி புகையிரதம் அனுராதபுரம் புகையிரதம் நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை தொடருந்து நிலையம் வரையில் இன்று (09/07/2023) காலை பரீட்சார்த்தமாக பயணித்திருந்தது. இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மகோ முதல் ஓமந்தை வரையான தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது. இதன்போது, அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் தொடருந்து பாதையும் வவுனியா – ஓமந்தை வரையான Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!!

முல்லைத்தீவு – மல்லாவி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More