TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

நாளை முதல் குறைகின்றன 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்!!

நாளை (17/08/2023) முதல் 9 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக சதொச நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 1 கிலோ சோயாவின் (மொத்த விற்பனை) விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 625 ரூபாவாகும். நெத்தலி ஒரு கிலோவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வவுனியாவில் வரலாறு காணாத வறட்சி….. இவ்வருடத்தில் இதுவரையில் 1120 பேர் பாதிப்பு!!

நிலவும் வரட்சியுடனான காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் நிலவும் வரட்சி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரூவான் ரட்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தில் நிலவுகின்ற வரட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரை 450 குடும்பங்களைச் சேர்ந்த 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமாக வவுனியா Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் தொண்டமானாறு – அக்கரை கடலில் மூழ்கி ஒருவ‌ர் ப‌லி!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை (09/08/2023) மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சிவராசா என்ற 75 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ திருவிழா….. யாழ் மாவட்ட காவல் துறைக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!!

நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ திருவிழா நாட்களின் போது குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (08/08/2023) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. அந்தவகையில், திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சரக்கு புகையிரதத்தில்  முன் பாய்ந்து 28 வயது யுவதி தற்கொலை!!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு புகையிரதத்தில்  முன் பாய்ந்து யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(09/08/2023) காலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பிரதேசத்தை சேர்ந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதி ஹட்டன்  நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும், குறித்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கனரக வாகனத்துடன் மோதிய புகையிரதம்….. பலத்த சேதங்களுடன் சுக்குநூறாகின இரண்டும்!!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீரிகம வில்வத்த பகுதியில் கனரக வாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று(09/08/2023) காலை இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரதம் சமிக்ஞை, மின்கம்பங்கள் மற்றும் புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விபத்தால், புகையிரதத்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் வடமராட்சியில் கம்பமொன்றில் மோதி உயிரிழந்தார்….. 22 வயது மன்னார் இளைஞர்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றிரவு (08/08/2023) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் கம்பம் ஒன்றில் மோதி படுகாயம் அடைந்த நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேளை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்துள்ள குறித்த நபர் மன்னார் முள்ளிக்குளம் பகுதியை சேர்ந்த 22 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வடக்கின் முன்னணி பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் உள்ள பிரபல பாடசாலைகள் சில பாடசாலை மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை ஈடு செய்வதற்காக மாணவர்களிடம் பணம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பாகிஸ்தானில் பரியா புகையிரத விபத்து….. இதுவரை 15 பேர் உயிரிழப்பு – 50+ பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில்!!

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பயணமாகிய ஹசாரா எக்ஸ்பிரஸ் என்ற தொடரூந்து தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது புகையிரதத்தின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென இடம்பெற்ற விபத்து காரணமாக, அந்தப் பாதையினூடான போக்குவரத்துகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

37 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பம்!!

தலைமன்னாரில் உள்ள துறைமுகங்களை புனரமைத்து இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த துறைமுகம் இப்போது மக்கள் பயன்பாட்டிற்காக புனரமைக்கப்படவுள்ளது. யுத்த சூழல்களின் போது அழிவடைந்த இந்த பிரதேசத்தை மக்கள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டு இருந்ததாகவும் இப்போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைவாக துறைமுகத்தினை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கையின் துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

Read More