TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும்!!

இலங்கையில் அடுத்த  ஆண்டில் (2024) பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் 72 சதவீதத்தால் உயரும் என பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் அமிந்த மெத்சிலா தெரிவித்துள்ளார். அரசு மறைமுக வரிகள் மூலம் 72 சதவீதம் கூடுதல் வருவாயை எதிர்பார்க்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பாதீட்டு ஆவணத்தின்படி 122400 கோடி ரூபாய் (1224 பில்லியன்) கூடுதல் வருமானத்தை அரசு எதிர்பார்க்கிறது. அதில் 72 சதவீதம் வற் மற்றும் இதர கூடுதல் வரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Read More

Read More
FEATUREDLatestNewsSportsTOP STORIES

இலங்கை கிரிக்கெட் மீதான தடை நீக்கம்!!

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் தகவல்!!

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01.11.2023) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2022 பல்கலைக்கழகங்களில் சேர்க்கைக்கான கட்ஆஃப் (Cut-off) புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  வரலாற்றில் முதல் தடவை இவ்வாறு வெளியிடப்பட்டால் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியானவையாக கருதப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகளும் கல்வி அமைச்சின் அறிவிப்பின்படி இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

திருகோணமலையில் சட்டவிரோதமான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமான வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை திருகோணமலையில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (23/11/2023) கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மீன்பிடிக்கு பயன்படுத்தும் வர்த்தக வெடிபொருட்களான தண்ணீர் ஜெல் குச்சிகள் மற்றும் மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் இந்த கைதின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதிகளான வலகம்ப மற்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

5 கோடிக்கும் ஆதிகமான ரூபா பணத்துடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 5 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் பெண் ஒருவர் உட்பட இருவர் பண்டாரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பிற பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை மாற்றியமை குறித்து காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பண்டாரகம பகுதியில் உள்ள வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும் பல்வேறு பகுதிகளில் உள்ள ATM  இயந்திரங்களில் இருந்து விரைவாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

சிகிச்சைபெற வந்த 29 வயது பெண்ணை வன்புணர்வு செய்த மருத்துவர்!!

தான்நடத்தும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரால் புளியங்குளம் பிரதேசத்தில் நடத்தப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சைபெறச் சென்ற 29 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்வு செய்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினரால் மருத்துவர் கைது Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

900 வருட பழமை வாய்ந்த “Tower of London” கோட்டையில் கம்பீரமாக பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி!!

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மத்திய லண்டனில் அமைந்துள்ள Tower of London என்ற 900 வருட பழமை வாய்ந்த கோட்டையில் தமிழீழத் தேசியக் கொடி(Tamil eelam) சாத்திய கல்லறையின் மேல் கார்த்திகை மலர்கள் பொழியும் காட்சி ஒளிவீசிக் காண்பிக்கப்பட்டது. லண்டன் வாழ் தமிழர்களின் ஏற்பாட்டில் இந்த வணக்க நிகழ்வு இடம்பெற்றது. இந்தக் கோட்டை இரு உலகப்போர்களிலும் இறந்த பிரித்தானிய மற்றும் சக தோழமை நாடுகளின் வீரர்களுக்கு poppy மலர்களால் அஞ்சலி செய்யும் ஒரு பிரபல Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

“ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன்” என மிரட்டிய இராணுவ சிப்பாய்….. நடந்தது என்ன!!

“ஒரு வார இறுதிக்குள் மகிந்த ராஜபக்சவை கொலை செய்வேன்” என மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று(23/11/2023) முற்பகல் வேளையில் நபர் ஒருவர் சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாது மகிந்த ராஜபக்சவை ஒரு வார காலத்திற்குள் கொலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து, நபர் ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்தே காவல்துறையினர் சந்தேக நபரை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை. அந்தவகையில், இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழில் அடித்து கொல்லப்பட்ட இளைஞன்….. நீதி கோரி “காக்கி உடையில் கொடூர மிருகங்களா” என்ற பதாதைகளுடன் வீதிக்கு இறங்கிய மக்கள்!!

யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி சித்தங்கேணி சந்தியில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸின் மரணமானது வட்டுக்கோட்டை காவல்துறையினரின் கோர முகத்தை எடுத்துக் காட்டுவதுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை கைது செய்யுமாறு Read More

Read More