யாழ் நாகர்கோவில் பகுதியில் இரு தரப்பு மோதல்….. துப்பாக்கி சூடு நடந்தது என கூறும் மக்கள் – மறுக்கும் காவல்துறை!!
நாகர்கோவிலில் இரு தரப்புகளிடையே மயானம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை நேற்று திங்கட்கிழமை (13/03/2023) பெரும் கலவரமாக மாறியுள்ளதுடன் துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இருதரப்பையும் இன்று பருத்தித்துறை காவல் நிலையத்திற்கு வருமாறு காவல்துறையினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாகர்கோவிலில் மயானம் ஒன்றின் மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14/03/2023) நடைபெறவிருந்தது. அந்த நிகழ்வுடன் தொடர்புடைய புலம்பெயர்வாசி ஒருவர் மீது நேற்றுமுன்தினம்(12/03/2023) தாக்குதல் நடத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகிறது. அது Read More