Sports

LatestNewsSportsTOP STORIES

“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!

ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது. மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Read More
EntertainmentLatestNewsSportsTOP STORIESWorld

T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்தைப் பிடித்தார் “வனிந்து ஹசரங்க”!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் T20 போட்டிகளின்  பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் Tabraiz Shamsi 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பந்துவீச்சாளர் Adil Rashid 746 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர்களான Josh Hazlewood மற்றும் Adam Zamba முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இலங்கையின் ‘வனிந்து ஹசரங்க’ 687 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

Read More
EntertainmentindiaLatestNewsSportsWorld

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில்!!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட கால பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் டி20 முறையில் விளையாடப்படும் எனவும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. ஆசியக் கோப்பைப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும் ஆனால் கொவிட்-19 மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய Read More

Read More
FEATUREDLatestNewsSports

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் திடீர் மரணம்!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வீரர் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஷேன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708- விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வோர்ன், 2007- ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.   ஷேன் வோர்னின் Read More

Read More
NewsSportsTOP STORIES

சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை!!

இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.   அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் , யாழ்.போதனா வைத்திய சாலை தாதி உத்தியோகத்தர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.   வேலை நிறுத்த காலத்தில் அவசர மற்றும் உயிர் காக்கும் சேவைகளில் மாத்திரமே தாதிய உத்தியோகத்தர்கள் ஈடுபடுவார்கள் என அறிவித்துள்ளனர்.   சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக Read More

Read More
LatestNewsSportsTOP STORIESWorld

வடக்கிலிருந்து மேலெழுந்துவந்த நட்ச்சத்திர வீரன் “டுக்சன் பியூஸ்” மாலைதீவில் மரணம்….. தற்கொலை என வதந்திகள்!!

மன்னாரை சொந்த இடமாக கொண்டவரும் இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை அணியின் தேசிய அணியில் இடம்பிடித்த இவர், காற்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகாண் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்று சிறப்பான Read More

Read More
EntertainmentindiaLatestNewsSportsWorld

தமிழ் பெண்ணை மணமுடிக்கவுள்ள கிளென் மெக்ஸ்வெல்!!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். கிளென் மெக்ஸ்வெல் அவுஸ்ரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் அவுஸ்ரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா அச்சுறுத்தல், லொக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், கிளென் மெக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வரும் Read More

Read More
EntertainmentindiaLatestNewsSportsTOP STORIESWorld

2022 IPL தொடருக்கான இறுதி செய்யப்பட்ட வீரர்களின் ஏலப்பட்டியல் வெளியீடு (பட்டியல் இணைப்பு)!!

2022 IPL தொடருக்கான இறுதி செய்யப்பட்ட வீரர்களின் ஏலப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. 1214 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த ஏலப்பட்டியல் அரைவாசியாகக் குறைக்கப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய இறுதிப் பட்டியலில் 590 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் 44 புதிய வீரர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டிற்கான IPL ஏலப்பட்டியலில் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் Jofra Archer பெயர் இடம்பெற்றுள்ள போதிலும் , தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக இந்த வருட IPL ஏலம் இரண்டு Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsSportsWorld

எம்.எஸ் தோனியின் சூப்பர் ஹீரோ அவதாரம் …… தீயாய் பரவும் புதிய லுக்!!

ரமேஷ் தமிழ்மணியின் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், தற்போது எம்.எஸ். Read More

Read More
LatestNewsSports

பாகிஸ்தானில் சென்று அடித்து தங்கம் வென்ற தமிழ் பெண்!!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வாழ்ந்து, குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி, பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச தர போட்டியில் பங்குகொள்ள அண்மையில் சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று(18) பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற 25 வயதுக்குட்பட்ட 50 Read More

Read More