முன்னாள் பெண்போராளியே தனங்கிளப்பு விபத்தில் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி- தனங்களப்பு- அறுகுவெளி- ஐயனார்கோவிலடியில் இன்று இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் முன்னாள் போராளியான குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய முன்னாள் போராளியான துசாந்தி என்ற பெண்ணே உயிரிழந்தவராவார். முன்னாள் போராளியான குறித்த குடும்பப் பெண் ஒரு காலை இழந்தநிலையில் செயற்கைக் கால் பொருத்தியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Read more

இந்தி நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா

இந்தி நடிகர் அர்ஜூன் கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகர்களில் அர்ஜூன் கபூரும் ஒருவர். இவர் பிரபல பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார். இந்தியில் வெளியான இஸ்க்ஜாடே, அவுரங்கசீப், குண்டே, 2 ஸ்டேட்ஸ், ஹீ அண்டு ஹா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் அர்ஜூன் கபூர். இந்நிலையில், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜூன் கபூர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜூன் Read More

Read more

இலங்கை கப்பல் தீயை அணைக்க தீவிர முயற்சி: எரிபொருள் கசிவு ஏற்பட்டால் பேராபத்து

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நேற்றைய தினம் தீ விபத்துக்குள்ளான கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது. இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள், இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள், இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான கப்பல்கள், தீ பரவியுள்ள கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு கப்பல் ஆகியவற்றைக் கொண்டு தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை Read More

Read more

யாழ்ப்பாணத்து இளம் தலைமுறை தொடர்பில் வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட கவலை !

வடக்கில் போதைபொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தினை பொறுத்தவரைக்கும் போதைபொருள் பாவனை அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது அதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது வடபகுதிக்கு கொண்டுவரப்படுகின்ற கஞ்சா மற்றும் ஹேரோயின் போன்ற பொருட்களை தடை செய்யப்பட வேண்டும். அதேபோல் அரசாங்கத்தின் பல வகையான கட்டுப்பாட்டு Read More

Read more

அவதானமாக இருக்கவும்! யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

தற்போதுள்ள காலநிலை மாற்றம் அடுத்து வரும் 18 மணித்தியாலங்களுக்கு தொடர்ச்சியாக நீடிக்குமெனவும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள Read More

Read more

ஸ்ரீலங்காவில் மேலும் 31பேருக்கு கொரோனா!

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 31 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,049ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகிய 169 பேர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைப் பெற்று வருவதோடு, தொற்றிலிருந்து இதுவரை 2,868 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இறுதியாக அடையாளம் 31 தொற்றாளர்களும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

செல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய மிக முக்கிய தகவல்

வரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது. மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும். அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு கடந்த ஆவணி 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. திருவிழாக் காலங்களில் அன்னதானம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு Read More

Read more

வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை

இன்றிலிருந்து(31ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல Read More

Read more

திடீரென குறைந்தது தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி குறைவடைந்ததை அடுத்து, அமெரிக்கா குறைந்த வட்டி விகிதத்தை பராமரிக்க தீர்மானித்ததை அடுத்து இந்த விலை குறைவடைந்துள்ளது. இதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,975 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடந்த வாரமளவில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கம் 2,000 டொலராக அதிகரித்திருந்தது. இதுவே தங்கத்தின் உயர்ந்த விலையாக கருதப்பட்டது. எனினும் தற்போது தங்கத்தின் Read More

Read more

லெபனான் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 188 ஆக உயர்வு – 7 பேரின் நிலை என்ன என்றே தெரியவில்லை – ராணுவம் தகவல்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகைமண்டலமாக மாறியது. பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த 740 டன் வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த Read More

Read more