FEATURED

FEATUREDLatestNewsTOP STORIES

சர்ச்சைக்குள்ளான “மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும்….” என்ற கருத்து…. பதவி விலகினார் இ.மி.ச பேச்சாளர்!!

“மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும்” என கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார். இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பதவி விலகிய நிலையில் தனது கருத்துக்களிற்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளார் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

எந்த பாடசாலைக்கும் கிடைக்காத அரியவாய்ப்பு!!

கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம்(19/02/2024) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மாணவர்கள் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதிபர் அலுவலகத்தில் அமைச்சரவை நடைபெறும் இடத்துக்கு சிறுவர்களை அழைத்து அமைச்சரவை என்றால் என்ன, அதன் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அதிபர் ரணில் தெரிவித்தார். நாட்டின் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை கூடும் அதே இடத்தில் முதன்முறையாக பாடசாலை மாணவர்கள் அதனை வழிநடத்தும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள்….. இதுவரையில் வெளிவராத நேற்றைய நிலநடுக்க சேத விவரங்கள்!!

ஆப்கானிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஆப்கானிஸ்தானிம் Mazar ie Zerief என்ற நகரத்தின் அருகே நேற்று(18/02/2024) மாலை உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்த யாழின் பிரபல பாடசாலை!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19/02/2024) காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது, கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்தோடு, கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஆசிரியையான மனைவியின் இரு கால்களையும் வெட்டி எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய்!!

காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கடந்த சனிக்கிழமை(17/02/2024) மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கு‌றி‌த்த செயலை செய்த பின்னர், சந்தேகநபரான கணவர் கையடக்கத் தொலைபேசியுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதான மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தொடந்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியை என Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் தவளையுடன் சீல் வைக்கப்பட்ட ஐஸ் கிரீம் கடை….. வெளியான முழுமையான விபரங்கள்!!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள குளிர்பான விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிரீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் கடந்த(14/03/2024) ஐஸ்கிரீம் குடிக்க சென்றவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இந்நிலையில், குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. சுகாதார பரிசோதகர் முன்னெடுத்த நடவடிக்கைக்கு அமைய குறித்த குளிர்பான விற்பனை நிலையம் சீல்வைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

கரையோரப் பாதுகாப்பிற்காக அமெரிக்காவின் King Air விமானம் ஒன்று இலங்கைக்கு!!

இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜதந்திரியான Doland Lu குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு ‘கிங் ஏர்‘ (King air) விமானமொன்று வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். King air விமானமானது, இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா ஏற்கனவே படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இரு நாட்களின் முன் காணாமல் போன….. 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை!!

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று(16/02/2024) சடலமாக மீட்கப்பட்டநிலையில் இன்றையதினம்(17/02/2024) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த சிறுமி நேற்று முன்தினம்(15/02/2024) மாலை காணாமற்போயுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்று(16/02/2024) காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் தாயும் தந்தையும் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் நகரில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் தோன்றிய பெட்டியால் – வெடிகுண்டு அச்சமடைந்த மக்கள் பரபரப்பு!!

யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17/02/2024) காலை இரும்பு பெட்டியொன்று அனாதரவாக காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது. வைத்தியசாலை வீதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்கு தகவலளித்த நிலையில் காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்துக்கு விரைந்து பெட்டியை சோதனையிட்டனர். இதன்போது, குறித்த பெட்டிக்குள் இயந்திர சாவிகள் காணப்பட்டமை தெரியவந்ததையடுத்து நிலைமை சுமூகமானது. இதனையடுத்து, காவல்துறையினர் குறித்த பெட்டியை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

35 நாடுகள் கலந்துகொள்ளும் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய விவசாய மாநாடு நாளை இலங்கையில்!!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடானது நாளை (18/02/2024) ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதிவரையான 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து Read More

Read More