FEATURED

FEATUREDLatestNews

சூறாவளியாக மாறும் வாய்ப்பு – விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இன்று (26) முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள இந்த அமைப்பு, நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை (27) மேலும் Read More

Read More
FEATUREDLatestNews

மின்சாரக் கட்டண திருத்தம் – மின்சார சபை வெளியிட்ட அறிக்கை

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2014-2022 காலப்பகுதியில் மின்சார சபை செலவினங்களை அங்கீகரித்த போதிலும் ஒழுங்குமுறை அதிகாரிகள் அதற்கேற்ப மின் கட்டணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்காததால், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த விடயத்தை மின்சார சபை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள வழிமுறையின்படி, 2024 இன் கடைசி காலாண்டில் திட்டமிடப்பட்ட செலவானது, இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளின் Read More

Read More
FEATUREDLatestNews

மத்திய மலைநாட்டில் தொடரும் மழை : திறக்கப்பட்ட வான் கதவுகள்

மத்திய மலைநாட்டில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பெய்து வரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கெடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் நீரினை வெளியேற்றுவதற்காக இன்று (26) நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் Read More

Read More
FEATUREDLatestNews

ஒத்திவைக்கப்பட்ட 2024 உயர்தரப் பரீட்சை – வெளியான அறிவிப்பு..!

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள் நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் Read More

Read More
FEATUREDLatestNews

ஒட்டுமொத்த இலங்கையையும் கைப்பற்றிய அநுர: வரலாறு காணாத வெற்றி பெற்ற திசைகாட்டி

நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1,968,716 வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 257,813 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி (NDF) 500,835 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஸ்ரீ Read More

Read More
FEATUREDLatestNews

யாழ் மாவட்டத்தை கைப்பற்றிய அனுரவின் திசைகாட்டி – இறுதி தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 80830 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 3 ஆசனங்களை பெற்றுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 63327 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 27983 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுள்ளனர். சுயேட்சைக் குழு 17 இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 27855 வாக்குகளைப் பெற்றுக் Read More

Read More
FEATUREDLatestNews

காலி தபால் மூல வாக்கு: முதல் முடிவிலேயே முன்னணியில் அநுர தரப்பு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி NPP) 32,296 வாக்குகளைப் பெற்றுள்ளது. புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,964 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,523 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,846 வாக்குகளைப் பெற்றுள்ளது.    

Read More
FEATUREDLatestNews

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் 3 ஆம் உலகப்போர் வந்துவிடும்! எச்சரிக்கும் டிரம்ப்

அமெரிக்காவின் (USA) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனாதிபதியானால் 3 ஆம் உலகப்போர் வந்துவிடும் என டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சீன ஜனாதிபதி  ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி புதின் போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவுக்கு திறமை கிடையாது. அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் நிச்சயம் 3-ம் உலகப்போர் வந்துவிடும். Read More

Read More
FEATUREDLatestNews

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ணம் 2024: வெற்றி வாகை சூடியது ஆப்கானிஸ்தான்

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதல்முறையாக ஆப்கானிஸ்தான் (Afghanistan) வெற்றிப்பெற்றுள்ளது. இலங்கை(Sri Lanka) A மற்றும் ஆப்கானிஸ்தான்  A அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி இன்று (27.10.2024) ஓமானில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனையடுத்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிக்கை….. கடந்த வருதத்தில் இருந்து 11.5% அதிகரிப்பு!!

முந்தைய ஆண்டை விடவும் 2024 செப்டம்பரில் இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் தொகை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தெரியவந்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் செப்டம்பர் 2023 இல் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் இது 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்தப் பணம் 4,843.8 Read More

Read More