FEATURED

FEATUREDLatestNews

நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை

நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாளைய நாளுக்கான மின்சாரத்திற்கான கேள்வி தொடர்பில் பரிசீலித்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிட்டவாறு இன்று(11) பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 4 வலயங்களாக பிரித்து நேற்றும்(10) இன்றும்(11) மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்திருந்தது.  

Read More
FEATUREDLatestNews

இன்றும் மின்வெட்டு – நுரைச்சோலை நாளைமறுதினம் வழமைக்கு வரும்

நுரைச்சோலை மின்நிலையத்தின் மின்னுற்பத்தி நடவடிக்கைகள் வியாழக்கிழமை வழமைக்கு திரும்புமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின்நிலையத்தின் மின்னுற்பத்தி ஆரம்பிக்கப்படும்பட்சத்தில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்படாதென மின்சார சபை ஊடகப்பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். நாளொன்றுக்கு 2400 மெகாவோட் மின்சார தேவை நாட்டில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்நாட்களில் 2400 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ஊடகப்பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன கூறினார். இதேவேளை, இன்றைய தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டை Read More

Read More
FEATUREDLatestNews

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளரை சந்தித்த பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியத்தை ​நேற்று(10) சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானத்தை திறம்பட நிர்வகித்தல், பொதுத்துறையின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார காரணிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்ட கொள்கை ரீதியான காரணிகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது Read More

Read More
FEATUREDLatestNews

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை : அரசின் அதிரடி நடவடிக்கை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறித்து அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்துவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி Read More

Read More
FEATUREDLatestNews

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து : பலர்காயம்

அமெரிக்காவின்(us) அரிசோனாவில் உள்ள விமான நிலையத்தில் இரண்டு ஜெட் விமானங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஒரு ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு ஜெட் விமானத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தின் தரையிறங்கும் கியர் தரையிறங்கும் போது செயலிழந்தது, இதனால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். Read More

Read More
FEATUREDLatestNews

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணம் : வெளியான நற்செய்தி

நாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்ச்செய்கைகளைப் பரிசோதித்து நட்டஈடு வழங்கும் செயற்பாடு தற்போது ஆரம்பமாகியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை (agricultural and agrarian insurance board) தெரிவித்துள்ளது. அத்துடன் பொலன்னறுவை (Polonnaruwa) மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 6,239 விவசாயிகளுக்காக 114 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த சபை மேலும்  குறிப்பிட்டுள்ளது. மேலும், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் விவசாய மற்றும் Read More

Read More
FEATUREDLatestNews

மீண்டும் நாடு முழுவதும் மின் வெட்டு

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்காக,  இலங்கை மின்சார சபை இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் மின்வெட்டுக்கு விடுத்த கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இயக்குநர்  ஜெயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார். மின்சாரத் தடையைத் தொடர்ந்து மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை நிர்வகிக்க, இன்று (10) மற்றும் நாளை (11) ஆகிய நாட்களில் ஒன்றரை மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது. அதன்படி, பிற்பகல் 3.30 மணி Read More

Read More
FEATUREDLatestNews

யாழில் இளைஞரை கடத்திய பெண் : வெளிநாட்டு மோகத்தால் நேர்ந்த கதி

யாழில் (Jaffna) இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (09.02.2025) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம் 80 இலட்சம் ரூபாய் வரையான பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு வங்கி அறிக்கையை நேரடியாக வந்து தமக்கு காட்டுமாறு வெளிநாட்டு முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை Read More

Read More
FEATUREDLatestNews

கொழும்பின் உயரமான கட்டிடத்தில் அடுத்தடுத்து தீ விபத்து : வெளியான காரணம்

கொழும்பின் மிக உயரமான கட்டிடமாகக் கருதப்படும் ‘கிரிஷ்’ கட்டிடத்தில் ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகளுக்கான காரணத்தை தீயணைப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் திணைக்களம் தற்போது முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில்  கட்டிடம் தீப்பிடிக்கக் காரணமான சில காரணிகளை கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, கட்டிடத்தின் இரும்பு பாகங்களை பாதுகாப்பற்ற முறையில் எரிவாயு கட்டர் (gas cutter) மூலம் வெட்டியதே தீ விபத்துக்கான முக்கிய காரணம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் இரும்பை வெட்டி Read More

Read More
FEATUREDLatestNews

அலப்பற கெளப்புறோம்! தலைவரு நிரந்தரம்! – ஜெயிலர் 2 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவுடன் Read More

Read More