நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கியில் கோளாறு….. மின்விநியோகம் தடைப்படுமா!!
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு உயர் அழுத்த வெப்பமாக்கி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைப்படாது என்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி அலகினை அதிகளவில் செயற்படுத்துவதன் ஊடாக மின்னுற்பத்தியை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் தெரிவிக்கின்றது.
பழுதடைந்த மின்பிறப்பாக்கி
அலகினை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக பழுதுபார்க்கும் காலத்தில் எந்தவித மின்சார தடையும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது.
நீர் மின்சாரம் அதிக திறனில் உற்பத்தி செய்யப்படுவதனால் மின் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாது என குறிப்பிடப்படுகிறது.