FEATURED

FEATUREDLatestNews

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை – முன்னாள் இராணுவ வீரர் அதிரடியாக கைது

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital – Anuradhapura) வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12.03.2025) காலை கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவரைத் தேடுவதற்காக 5 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் Read More

Read More
FEATUREDLatestNews

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மறுத்துள்ளது. நாடு முழுவதும் இன்று 1,581 ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாலும் எரிபொருள் பற்றாக்குறை இருக்காது என கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். அத்தோடு, நாட்டில் மூன்று வாரங்களுக்கு போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் ஓகஸ்ட் மாதம் வரை ஏற்கனவே ஓர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தவிசாளர் Read More

Read More
FEATUREDLatestNews

கொழும்பு – கொட்டாஞ்சேனையில் சற்று முன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று சற்று முன்னர்  இடம்பெற்றுள்ளது. கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் பெயர் சசிகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி சறறுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார்.  இதையடுத்து, கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் Read More

Read More
FEATUREDLatestNews

கனேமுல்லே சஞ்சீவ கொலை ; பிரதான சந்தேகநபர் கைது

கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் இன்று(19) முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கனேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார். இதன் பிரதான சந்தேகநபர் கொலை சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் கைது செய்யப்பட்டார். புத்தளம் – பாலாவி பகுதியில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவொன்றின் தலைவரான கனேமுல்லே சஞ்சீவ பூசா Read More

Read More
FEATUREDLatestNews

விபத்தில் சிக்கிய இளங்குமரன் எம்.பி : நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் ஹரினி

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் (Karunananthan Ilankumaran) விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இன்றையதினம் (15) இந்த விபத்து சம்பவித்துள்ளது. வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அவரது உதவியாளர் மற்றும் வாகனத்தின் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கி Read More

Read More
FEATUREDLatestNews

யாழ். கொழும்பு தொடருந்து சேவை : வெளியான மகிழ்ச்சி தகவல்

கொழும்பு கோட்டை (Fort) தொடக்கம் யாழ். காங்கேசன்துறைக்கிடையிலான (Kankesanthurai) இரவு தபால் தொடருந்து சேவை மொரட்டுவையில் இருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது. குறித்த தொடருந்து சேவையானது நேற்று (14.02.2025) இரவு முதல் சேவையை ஆரம்பித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department – Sri Lanka) தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை வரை செல்லும் இந்த தொடருந்து சேவையை வெள்ளவத்தையில் இருந்து ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்நிலையில் இரவு தபால் தொடருந்து சேவை மொரட்டுவையில் இருந்து தனது சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, Read More

Read More
FEATUREDLatestNews

கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் : வெடித்த சர்ச்சை

கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெயரில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவல் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்தநிலையில், பொறுப்பதிகாரிக்கு பதுளைக்கு Read More

Read More
FEATUREDLatestNews

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம்

புதிய ஊழியர் சேமலாப நிதிய(EPF) முகாமைத்துவத் தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த விடயத்தை இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ​பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு, இலங்கையின் பாரிய ஓய்வூதிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தின் தற்போதைய மொத்த அங்கத்தவர்களின் கணக்குகளின் எண்ணிக்கை 21.5 மில்லியன்களாவதுடன், சேமலாப நிதி அனுப்பப்பட்டு இயங்குநிலையிலுள்ள சேவை வழங்குநர்களின் Read More

Read More
FEATUREDLatestNews

மாணவர்களுக்கு விசேட கடன் திட்டம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

உயர்கல்விக்குத் தகுதிபெறும் மாணவர்களுக்கு விசேட கடன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு, அரச சாரா பல்கலைக்கழகங்களுடன் இணைந்து விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று (11.02.2025) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச சாரா பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆண்டுதோறும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்திபெறும் சகல மாணவர்களுக்கும் அரச பல்கலைக்கழகங்களின் கற்பதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, உயர்கல்விக்கு Read More

Read More
FEATUREDLatestNews

நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது – இலங்கை மின்சார சபை

நாளை(12) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாளைய நாளுக்கான மின்சாரத்திற்கான கேள்வி தொடர்பில் பரிசீலித்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார். ஏற்கனவே திட்டமிட்டவாறு இன்று(11) பிற்பகல் 3.30 முதல் இரவு 10 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 4 வலயங்களாக பிரித்து நேற்றும்(10) இன்றும்(11) மின்வெட்டை அமுல்படுத்தி மின்சாரத்திற்கான கேள்வியை முகாமைத்துவம் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை நேற்று அறிவித்திருந்தது.  

Read More