EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

குடியேறுவதற்கு ஏற்ற நாடாக கனடா முதலிடத்தில்….. “Compare the Market” ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

உலகிலேயே குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக,

கனடா மிகவும் பிரபலமாக உள்ளது என்று அவுஸ்திரேலிய இணையதளமான (Compare the Market) தெரிவித்துள்ளது.

கூகுள் தேடலின்படி குறித்த ஆய்வு நடத்தப்பட்டு குடியேறுவதற்கு ஏற்ற அல்லது விரும்பத்தக்க நாடாக கனடா உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Compare the Market வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கனடா, வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு (expats) மிகவும் வரவேற்கத்தக்க நாடு

இது மிகவும் மாறுபட்ட மற்றும் பன்முக கலாச்சார நாடாக மாற வழிவகுத்துள்ளது.

மேலும்,

அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, சிவில் உரிமைகள், வாழ்க்கைத் தரம், பொருளாதார சுதந்திரம் மற்றும் கல்வி போன்ற விடயங்களுக்கும் இது தொடர்ந்து உயர் தரவரிசையில் உள்ளது.

இரண்டாவது மிகவும் பிரபலமான குடியேற விரும்பத்தக்க நாடாக ஜப்பான் இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து,

ஸ்பெயின் மூன்றாவது இடமாகவும்,

சீனா மற்றும் பிரான்ஸ் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் இருப்பதாகவும் ஆய்வின் மூலம் கருதப்பட்டது.

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிற்கும், பின்வரும் ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய ஆங்கில மொழி, கூகுள் தேடல் சொற்களின் வருடாந்திர அளவைப் பார்ப்பதன் மூலம் ஆய்வின் முடிவுகள் உருவாக்கப்பட்டன:

  • Houses
  • in property
  • Moving to
  • Relocating to

எடுத்துக்காட்டாக,

Houses in Canada, Canada Property, Moving to Canada, Relocating to Canada என

ஒவ்வொரு நாட்டிற்கான மொத்த தேடல்களின் எண்ணிக்கையே கனடாவுக்கு மதிப்பெண்ணைக் கொடுத்தது மற்றும் நாடுகளை அவற்றின் வளர்ச்சி உட்கட்டமைப்பு அடிப்படையில், இந்த பட்டியல் வரிசைப்படுத்தபட்டுள்ளது.

இதன்படி,

குடியேற்ற வாசிகள் புதிதாக குடியேற கனடா சிறந்த நாடக உள்ளமை எடுத்து காட்டப்படுகின்றது.

One thought on “குடியேறுவதற்கு ஏற்ற நாடாக கனடா முதலிடத்தில்….. “Compare the Market” ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *