காதலித்து வந்த இளைஞன் தவறானவன் என கூறியதால்….. 18 வயது தமிழ் யுவதி தூக்கிட்டு தற்கொலை!!
தான் காதலித்து வந்த நபரை பற்றி வீட்டார் தவறான முறையி கூறியதன் காரணமாக,
18 வயது யுவதி தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று திருகோணமலையில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (27/11/2022) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலித்து வந்த இளைஞன் சரியில்லை என தாயார் தனது மகளுக்கு அறிவுரை கூறியதையடுத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த யுவதி அலத்தோட்டம் – ஆனந்த விநாயகர் வீதியில் வசித்து வரும் 18 வயதுடைய சிவக்குமார் கீர்த்தனா எனவும் ,
தெரியவந்துள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த யுவதியை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.