வடமராட்சியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்!!

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணிமுடங்குதீவு பகுதியில் திடீரென சிவலிங்கமொன்று பிரதிஷ்டையாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சிவலிங்கம் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று(17/02/2023) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவலிங்கம் பிரதிஷ்டை இன்று(18/02/2022) சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம்(17/02/2023) இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்திற்கு பூ வைத்து, கற்பூரம் ஏத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *