இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!!
இன்று (19/05/2022) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில்,
ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோரையும் பேக்கரி உரிமையாளர்களையும் பாதிக்காத வகையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சிற்றுண்டிகளுக்கான விலைகளை நாளை காலை முதல் 10 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார்.