ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து மிகப்பெரிய தொகை!!
சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகையை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணங்கியுள்ளது.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமைக்கான 85 மில்லியன் டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.
கொள்முதல் நடைமுறையில் உள்ள வெளிப்படைத்தன்மை மற்றும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு நாட்டில் நிலவும் நிலையில் இந்த இணக்கத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.