ஆபத்தில் யாழ்ப்பாணம்! சுமார் 1500 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் சுமார் 1500 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வரை அவை வெளியாகவில்லை.

யாழ்.நகர வர்த்தகர்களிடம் நேற்று முன்தினம் பெறப்பட்ட 870 மாதிரிகள் பரிசோதனைக்காக முல்லேரியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாற்பண்ணைப்பகுதி மக்களிடம் பெறப்பட்ட 172 மாதிரிகளும் நேற்று நகர வர்த்தகர்களிடம் பெற்ற 596 மாதிரிகளுமாக மொத்தம் 768 மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் யாழ். போதனா வைத்தியசாலையின் மாதிரிகளும் பரிசோதனை செய்யப்படுவதனால் நேற்று நகர வர்த்தகர்களிம் பெறப்பட்ட மாதிரிகள் இன்றைய தினமே பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் பெறப்பட்ட 870 மாதிரிகளும் நேற்று பெறப்பட்ட 768 மாதிரிகளுமாக மொத்தம் 1638 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று எதிர்பார்க்கப்படுகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *