சுமார் 70 மணிநேரமாக ஆழ்துளைக்கிணற்றில் சிக்கி தவிக்கும் 08 வயது சிறுவன்!!

மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழம்கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 8 வயது சிறுவனை மீட்க 3 நாட்களாக மீட்பு பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில், பெதுல் மாவட்டத்தில் உள்ள மாண்டவி கிராமத்தில் 8 வயது குழந்தை தன்மமி சாஹு 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான்.

ஆழ்துளை கிணற்றுக்குள் 55 அடியில் மாட்டிக்கொண்ட சிறுவன் கடந்த 3 நாட்களாக அதற்குள் சிக்கியுள்ளான்.

தேசிய பேரிடர் மீட்புப் படை ,

மாநில பேரிடர் மீட்புப் படை

ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் கடந்த மூன்று நாட்களாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதி கடினமான பாறையாக இருப்பதால் பள்ளம் வெட்டுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

மூன்றாம் வகுப்பு படிக்கும் அச்சிறுவன்,

கடந்த மூன்று நாட்களாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளதால்,

அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே கண்காணித்துவருகின்றனர்.

சிறுவனுக்கு தொடர்ந்து Oxygen(O2)வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே,

சிறுவனைக் காப்பாற்றும் நடவடிக்கை கிட்டத்தட்ட 70 மணிநேரமாக நடந்துவரும் நிலையில்,

சோகத்தில் ஆழ்ந்துள்ள சிறுவனின் குடும்பத்தினர் விரக்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தங்கள் குழந்தையின் நிலை குறித்து உடனடியாக பதில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுவனுக்கு தொடர்ந்து Oxygenவழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே,

சிறுவனைக் காப்பாற்றும் நடவடிக்கை கிட்டத்தட்ட 70 மணிநேரமாக நடந்துவரும் நிலையில்,

சோகத்தில் ஆழ்ந்துள்ள சிறுவனின் குடும்பத்தினர் விரக்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

தங்கள் குழந்தையின் நிலை குறித்து உடனடியாக பதில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்மயின் தாயார்,

“என் குழந்தையை என்னிடம் கொடுத்து விடுங்கள், எதுவாக இருந்தாலும் சரி, தலைவர் அல்லது அதிகாரியின் குழந்தையாக இருந்தாலும் இவ்வளவு நேரம் எடுத்திருக்குமா? இவ்வளவு நேரம் கடந்துவிட்டது, அவர்கள் எதுவும் பேசவில்லை, பார்க்க அனுமதிக்கவில்லை.

இன்னும் இரண்டு நான்கு மணி நேரம் என்று கூறி மூன்று நாட்கள் கடந்துவிட்டன.

தன்மயி செவ்வாய்கிழமை விழுந்தான், இப்போது வெள்ளிக்கிழமை ஆகிறது.

எனக்கு எதுவும் வேண்டாம்,

என் மகனை வெளியே எடுத்துவிடுங்கள்,

என் குழந்தையை ஒருமுறை பார்க்க வேண்டும், எதுவாக இருந்தாலும்,

அவனை வெளியே கொண்டு வாருங்கள்” என்று அவர் விரக்தியுடன் கேட்டுக்கொண்டார்.

வியாழன் முதல் பதிலளிக்காத தன்மயின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிர்வாகத்தின் பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.

இதற்கிடையில்,

சிறுவனின் பள்ளி தோழர்கள், அவனது நலனுக்காக காயத்ரி மந்திரத்தை ஜபித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *