317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பு….. உதவிகள் கோரும் உறவுகள்!!

317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும்

317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 317 பேர் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாதா நிலையில் பழுதடைந்ததால் கப்பலை செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,

கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *