EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

முதலையை திருமணம் செய்த நகர மேயர்!!

மெக்ஸிகோவில்(Mexico) மேயர் ஒருவர் முதலையை திருமணம் செய்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மெக்சிகோ நாட்டில்,

சான்பெத்ரோ ஹுவாமெலுவா(San Pedro Huamelua) என்ற நகரத்தின் மேயராக இருப்பவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது.

அந்த பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக முதலை திருமணம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்,

மேயர் ஹியூகோ சாசா முதலை(Hugo Chasa the crocodile) ஒன்றை திருமணம் செய்து கொண்டது போல காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அந்த புகைபடத்தில், முதலைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதனை மேயர் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்ததும் மேயர் அந்த முதலைக்கு முத்தமிட்டார்.

பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களின் இயற்கை வளத்தையும், மழை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேயர் முதலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *