இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்( Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவிற்கு வழங்கும் உடன்படிக்கையினை மீளப்பெறுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் , குறித்த போராட்டத்தில் ஈடுபடுவதாக 11 கட்சிகளின் தலைவர்கள் வாக்குறுதியளித்துள்ளனர். அதன்படி நாளைய தினம் குறித்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த கூட்டு தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் ( Ranjan Jayalal)கூறியுள்ளார்.