LatestNews

சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு ஒன்று தீ வைத்த விசமிகள்!!

மட்டக்களப்பு பெரிய உப்போடை லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் வைத்து மீனவரின் படகு ஒன்று தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடேந்தேறியுள்ளது.

சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு மற்றும் வலை இயந்திரம் உட்பட அனைத்தும் முற்றாக கருகி நாசமாகியுள்ளன.

இன்று அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே இவ்வாறு படகு தீ பற்றி எரிவதை அவதானித்துள்ளனர்.

மட்டக்களப்பு நாவலடி சுவிஸ் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகே இவ்வாறு இனம் தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ வைப்பு சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *