LatestNews

கள்ளு விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

வடமாகாணம் முழுவதும் இன்றிலிருந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கள்ளு தவறணை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

இன்று பனை அபிவிருத்தி சபை தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கொரோனாநிலைமை காரணமாக சகல கள்ளு தவறனைகளும் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக கள்ளு விநியோகமும் பாதிக்கப்பட்டிருந்தது.  தற்போது மதுவரித் திணைக்களத்தினால் விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது கள்ளினை போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கு குறித்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த முயற்சியை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் பொதுமக்களால் எனக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டிருந்தது அதாவது கள்ளு தவறனைகளை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு.  குறித்த விடயம் தொடர்பில் உடனடியாகவே மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகளுடன் வடக்கில் தவறணைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

தவறனை திறக்க முடியும் ஆனால் தவறணைகளில் பொதுமக்கள் கள்ளு அருந்த முடியாது அத்தோடு அந்த பகுதியில் ஒன்று கூடி நிற்க முடியாது எனவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி கள்ளு விற்க முடியும் என நிபந்தனைகளுடன் தவறணைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இந்த அனுமதியினை சரியான முறையில் பயன்படுத்தி செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *