பயணத்தடையில் மாற்றம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் தளர்த்தப்படும் என அரசாங்கம் முன்னர் அறிவித்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
அதில், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடைவௌி அற்ற பயணத்தடையை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதனால் எதிர்வரும் 25ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் வீட்டுக்கு ஒருவர் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் அன்றைய தினம் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை பயணத்தடை தளர்த்தப்படுமே தவிர நீக்கப்படாது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.