தலைக்கவச பிரச்சினையால் பெண் ஒருவர் அடித்து கொலை!!!!
மட்டக்களப்பு – ஆயித்தியமலை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதுடன், பெண் மீது தாக்குதல் நடாத்தியவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயித்தியமலை உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்களான இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு அதில் தலைக்கவசத்தை வைத்துவிட்டு கசிப்பு வாங்கச் சென்றுள்ள நிலையில் கசிப்பு இல்லை என்ற நிலையில் திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசம் காணாமல்போயுள்ளது.
இந்த நிலையில் கசிப்பு வாங்கச் சென்றவருக்கும் குறித்த பெண்ணுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் திரும்பிச் சென்ற போது அவர்களை வழிமறித்து குறித்த பெண்ணின் மகன் தாக்குதல் நடாத்தியுள்ளார்.