களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு! விடுக்கப்பட்டது அபாய எச்சரிக்கை!!
களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுகிறதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
களு கங்கை ஊடறுத்து செல்கின்ற பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இரத்தினபுரி, நிவித்திகல, பெல்மடுல்ல, கஹாவத்தை மற்றும் எலபாத்த ஆகிய இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.