மனைவியின் தலையை வெட்டி எடுத்து காவல்துறையில் சரணடைந்த கணவன் – வவுனியாவில் கொடூரம்
வவுனியாவில் (Vavuniya) இளம் மனைவியை கொடூரமாக கொலைசெய்தாக சந்தேகிக்கப்படும் கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
தனது மனைவியை கொலை செய்த நிலையில் அவரின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்த கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் 32 வயதான ரஜூட் சுவர்ணலதா எனவும் அவர் கர்ப்பிணி பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப முரண்பாடு கொலை செய்த மனைவின் உடலை காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில், பெண்ணின் உடல் சின்னப்பூவரசங்குளத்திற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்ப முரண்பாடு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம், நொச்சிக்குளம் – அனந்தர்புளியம்குளம் பகுதியை சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற குடும்பஸ்தரே கொலையை செய்ததாக தெரிவித்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.