CINEMAFEATUREDindiaLatestNews

நீங்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் “VIRTUAL WARRIORS”- விஜய்…

த.வெ.க.வின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய வீடியோவை வெளியிட்டனர். அந்த வீடியோவில் விஜய் பேசியதாவது:- ஐடி விக் நிர்வாகிகள் ஆலோனை கூட்டத்தில் ஜூம் மீட் மூலம் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், நெட்வொர்க் பிரச்சனையால் அது முடியாமல் போனது.

அதனால், ரெக்கார்டட் மெசேஜ் அனுப்புகிறேன். இதன்மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நம் சோசியல் மீடியா படை அது தான் இந்தியாவிலேயே மமிகப்பெரிய படை என்று சொல்கிறார்கள். இது நாம் சொல்வதை விட மற்றவர்கள் பார்த்து தெரிந்துக் கொள்கிறார்கள்.இனிமேல் நீங்கள் சோசியல் மீடியா ரசிகர்கள் மட்டும் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் நீங்கள் அனைவருமே கட்சியின் virtual warriors.

அப்படிதான் நான் உங்களை கூப்பிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நம் ஐடி விங் என்றாலே ஒழுக்கமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வேலைப் பாருங்கள். கூடிய விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்… நன்றி…! இவ்வாறு அவர் கூறினார்.