FEATUREDLatestNews

பெருந்தொகை இலத்திரனியல் சாதனங்களுடன் சிக்கிய சீன பிரஜைகள்

மேற்கு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 மடிக்கணனிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து உணவு எடுத்து வந்ததாகவும், இருபது இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர். நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *