FEATUREDLatestNews

வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்புவசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

குறித்த விடயம் இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 8.25 சதவீதம் மற்றும் 9.25 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர்,சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உப தலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உஉறுதியளித்துள்ளனர்.

தற்போது இலங்கையின் பொருளாதாரம் மீளக் கட்டமைப்பதற்கு தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்பதை அறிந்துகொண்டுள்ளதோடு, பொருளாதார வளர்ச்சி, செழுமை மற்றும் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஒரே அளவான முக்கியத்துவத்தை கொண்டவை என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளை பூர்த்தி செய்வதை போலவே அனைத்தும் உள்ளடங்களான அபிவிருத்திக்கு இலங்கையின் புதிய நிருவாகத் தலைமைக்கு உலக வங்கிக் குழுமத்தின் ஆதரவை பெற்றுத்தர அர்ப்பணிப்பதாகவும் அந்த கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *