முன்பள்ளிகள், தரம் 6 வரைக்குமான 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்……
சுகாதார வழிகாட்டுதலின் கீழ் விரைவில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நேற்று (15) சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்பள்ளிகள், தரம் 6 வரைக்குமான 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் விரைவில் திறப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சகம் இறுதி செய்து வருகிறது.
அதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பாடசாலைகளை திறப்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது. மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழு கலந்து கொண்டனர்.