FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

இம்மாத இறுதிக்குள் பூமியில் விழுவுள்ள செயற்கைகோள்!!

ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கொள் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியினை வெளியிட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather Satellite) என்ற இந்த செயற்கைக்கோளானது இம்மாத இறுதிக்குள் பூமியில் விழலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஓசோன் படலத்தை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள், ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால்,

கிராண்ட்பாதர்செயற்கைகோளின்(GrandfatherSatellite) உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாகவும் ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுற்றுப்பாதையை விட்டு விலகியுள்ள செயற்கைகோளை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் அது எங்கு விழும் என கூற முடியவில்லை என ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

இருந்த போதிலும்,

அதன் விழும் பாகங்களை ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளின் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் நிலையில் காணப்படுகின்ற போதிலும்

சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

இம்மாத இறுதிக்குள் கிராண்ட்பாதர் செயற்கைகோளின் உடைந்த துண்டங்கள் பூமியில் விழலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

One thought on “இம்மாத இறுதிக்குள் பூமியில் விழுவுள்ள செயற்கைகோள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *