திருத்தங்கள் அடங்கிய முன்மொழிவுகள் அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிலிருக்கும்….. அமைச்சர் கஞ்சன!!
மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயங்களை அவர் x வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு,
அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குங்கள்……………….!
மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வரைவு எதிர்காலத்தில் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை மீறும் வகையில் செயற்படும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மின்சார சபை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிலையில்,
இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று இன்று(03/01/2024) கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
அதன்போது,
பாதுகாப்பிற்காக பெருமளவி்லான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.