FEATUREDindiaLatestNewsTOP STORIES

650 கோடி இந்திய ரூபா மதிப்பில்….. மதுரோடு முதல் மதவாச்சி வரை தொடருந்து பாதை பணிகள் ஆரம்பம்!!

இலங்கையின் வடபகுதியில் உள்ள 252 கிலோமீற்றர் தூர தொடருந்து பாதையை சீரமைக்கும் பணிகளுக்கு இந்தியா உதவ முன்வந்துள்ளது.

பல ஆண்டுகள் பழமை வாழ்ந்த இந்த ரெயில் பாதை 81 மில்லியன் டொலர் (சுமார் ரூ.650 கோடி இந்திய ரூபா) மதிப்பில் சீரமைக்கப்படுகிறது.

இலங்கையில் பல்வேறு தொடருந்து பாதை மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வரும் இர்கான் இன்டர்நேஷனல்(Irqan International) என்ற இந்திய நிறுவனம்  இந்த பணிகளை மேற்கொள்கிறது.

இதில் முதல்கட்டமாக மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான 43 கி.மீ. தூர பணிகள் நேற்று(09/01/2022) தொடங்கப்பட்டது.

இதில் இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே,

இலங்கையின் போக்குவரத்து மந்திரி பந்துல குணவர்தனே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோபால் பாக்லே பேசும்போது,

‘இலங்கை ரெயில்வே துறையில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமான திட்டங்களை இந்தியா மேற்கொண்டு உள்ளது.’

மேலும்,

சுமார் ரூ.1,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டிலும் பரிசீலனையிலும் உள்ளன’ என்று தெரிவித்தார்.

முன்னதாக இந்த திட்டம் குறித்து இந்திய தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில்,

‘மதவாச்சியில் தொடருந்து பாதை சீரமைப்பு பணியின் அதிகாரபூர்வ திறப்பு விழாவுடன் இந்தியா-இலங்கை ரெயில்வே ஒத்துழைப்பின் புகழ்பெற்ற புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது’ என குறிப்பிட்டு இருந்தது.

இந்த தொடக்க விழாவில் பேசிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தனா இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும்,

கடந்த 1905 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தொடருந்து பாதை ஒரு நூற்றாண்டுக்கு மேல் மேம்படுத்தப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை,

மதுரோடு முதல் மதவாச்சி வரையிலான இந்த தொடருந்து பாதை மேம்பாட்டு பணிகள் 5 மாதங்களில் முடிவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

One thought on “650 கோடி இந்திய ரூபா மதிப்பில்….. மதுரோடு முதல் மதவாச்சி வரை தொடருந்து பாதை பணிகள் ஆரம்பம்!!

  • Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *