LatestNewsTOP STORIESWorld

கடும் பனிப்பொவில் உறைந்து போன ஏறியினுள் விழுந்த 6 சிறுவர்கள்….. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர் – இருவர் மாயம்!!

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தவறி விழுந்த நான்கு சிறுவர்கள் உயிருக்கு போராடுவதாகவும்,

மேலும் இருவர்  மாயமாகியுள்ளதாகவும் வெளியாகியு்ளள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட நால்வருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்து போன Babbs Mill ஏரியில் 6 சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஏரிக்குள் தவறி விழுந்த சிறுவர்களில் நால்வர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில்,

அவர்களின் வயதை கருத்தில் கொண்டால் இதுவரை மீட்கப்படாத நிலையில்,

அவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றே மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் இரவு முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்றே கூறப்படுகிறது.

நீருக்குள் சிக்கிய சிறுவர்கள் இருவரா அல்லது எண்ணிக்கை அதிகமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் இர்துவரை வெளியாகவில்லை என்றே தெரியவந்துள்ளது.

இதனால்,
சம்பவம் நடந்த பகுதியில் மக்கள் மிகுந்த சோகத்துடன் காணப்படுகின்றனர்.
அதுமட்டுமின்றி,

சிறார்களின் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை தொடர்பு கொள்ளவும் காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.

உறைந்து போன ஏரியின் மீது சிறார்கள் விளையாடிவந்த நிலையில்,

திடீரென்று விபத்து ஏற்பட்டு உயிர் உறையும் நீருக்குள் மூழ்கியுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு நால்வரை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறார்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

இதில் இருவர் ஹார்ட்லேண்ட்ஸ் மருத்துவமனையிலும் இருவர் பேர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏரியில் இருந்து மீட்கப்பட்ட நால்வரும் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும்,

தற்போது உயிர் காக்கும் சிகிச்சை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2 thoughts on “கடும் பனிப்பொவில் உறைந்து போன ஏறியினுள் விழுந்த 6 சிறுவர்கள்….. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நால்வர் – இருவர் மாயம்!!

  • Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

  • Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *