பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான ஜனாதிபதியால் புதிய நியமனங்கள்!!

அமைதியற்ற சூழ்நிலையில் இலங்கை முழுவவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்

பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளுக்கான செயலாளர்கள் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், மகிந்த சிறிவர்தன நிதி அமைச்சின் செயலாளராகவும் தொடர்ந்தும் பணியாற்றவுள்ளனர்.

பிரதமரின் இராஜினாமாவை அடுத்து அமைச்சுக்களின் செயலாளர்களும் இல்லாதொழிக்கப்படவுள்ளதுடன், நாட்டின் அலுவல்களை தொடரும் வகையில் மீண்டும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நியமனங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதாக அரச தலைவரின் செயலகம் அறிவித்துள்ளது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *