கொழும்பிற்கு வருவோருக்கு பொலிஸார் வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்!!
தலைநகர் கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தலொன்றை வெளியிட்டுள்ளனர்.
பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தேவைகளுக்காக மக்கள் தலைநகர் கொழும்பிற்கு வருகின்றனர். காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதனை அவதானிக்க முடிவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனால் மக்கள் வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மாலை கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாரியளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வருவோரின் நலனைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.